
பெரும்பாலான எந்தக்காலத்து தமிழ் பாடல்கள் என்றாலும்
http://www.cooltoad.com/ மூலமாக இலவசமாக இலகுவாக பதிவிறக்கிக்கொள்ள முடியும். முதலில் மேற்படி இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து User name, Password என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் Music என்பதை தெரிவுசெய்து தேடலில் (Search) எமக்கு தேவையான பாடலின் முதல் வரி, அல்லது பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர், அல்லது இசையமைப்பாளர் பெயர் முதலியவற்றை கொடுப்பதன்மூலம் எமக்கு தேவையான பாடலை தேடிக்கொள்ளலாம். தமிழுக்கு ஆங்கிலத்தில் வேறு வேறான முறைகளில் எழுதமுடியுமாதலால் பாடல் கிடைக்கும் வரை வெவ்வேறு Spelling இல் முயற்சி செய்யலாம். உதாரணமாக தமிழா தமிழா.. எனத்தொடங்கும் பாடலிற்கு Thamila,Tamila, Thamizha என்றவாறாகத்தேடமுடியும். பராசக்தி முதல் தற்சமயம் வெளியாகும் பாடல்கள் வரை பெரும்பாலான பாடல்கள் கிடைக்கின்றன. இது தவிர ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆங்கிலம் முதலான மொழிப்பாடல்களும் கிடைக்கின்றன. கேட்கக்கிடைக்காத உங்களின் ஞாபகங்களில் நின்ற பாடல்கள் கிடைத்திட வாழ்த்துக்கள்!.
No comments:
Post a Comment