Friday, February 15, 2008

மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத்திட்டம்

பழந்தமிழ் இலக்கியங்களையும் தமிழ் சமயநூல்களையும் இணையத்தில் தொகுத்து வழங்கும் ஒரு முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத்திட்டம். இதில் திருக்குறளில் இருந்து வைரமுத்துவின் 'தண்ணீர்தேசம்' வரையிலான நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நளவெண்பா, நாலடியார், ஆத்திசூடி, சீறாப்புராணம் மற்றும் பிரபந்தங்கள் தேவாரங்கள் பைபிளின் மொழிபெயர்ப்பு போன்ற நாம்மறந்து போன பழைய நூல்களை மின்னூலாகத்தொகுத்திருப்பது காலத்தின் தேவையை நிறைவேற்றும் பயன்மிக்க செயற்பாடாகும். புலம்பெயர் தமிழ் ஆர்வலர்கள் இவ்வாறான முயற்சிகளை முழுமையாகப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.



கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று நாவல்களும் Portable Document Format (PDF) கோப்புக்களாக தரவிறக்கிக்கொள்ள முடிவது சிறப்பம்சம். கல்கியின் நாவல்களை ஒரு வரலாற்றுப்பதிவாகவும் கொள்ளமுடியும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, அலைஓசை என்ற ஒழுங்கில் கல்கியின் நூல்களை வாசிப்பது வரலாற்றின் தொடர்ச்சியையும் சமூக மாறுதல்களையும் புரிந்துகொள்ள உதவும்.


இதைப்போன்றே ஈழத்திலிருந்து வெளிவந்த நூல்களை இணையத்தில் ஏற்றும் திட்டமே நூலகத்திட்டமாகும். இதன் இணைய இணைப்பு இத்தளத்திலும் வழங்கப்பட்டிருக்கிறது. தன்னார்வலர்களால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திலும் ஈழத்திலிருந்து வெளியிடப்பட்ட பலநூல்களை பார்க்கமுடியும். 'முறிந்த பனை' என்ற ரஜனி திரணகமவின் நூலை PDF கோப்பாக தரவிறக்கமுடிவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: