Friday, June 20, 2008

மனதை தொட்ட 'ஓம்காரா' - ओमकारा

வில்லியம் ஷேக்ஸபியரின் 'ஒத்தெல்லோ' நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்டதே 'ஓம்காரா' என்ற ஹிந்தித்திரைப்படம்.

விஷால் பரத்வாஜ் இயக்கி அவரே இசையமைத்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகக்கவனமாகக் கையாளப்பட்ட திரைக்கதையில் விஷால் பரத்வாஜிடன்
ராபின் பட், அபிஷேக் சௌபே ஆகியோரும் பங்களித்திருக்கிறார்கள்.


இயக்குநரே இசையமைப்பாளராகவும் இருப்பதால் பாடல்கள் துள்ளிசை மற்றும் மெல்லிசையாக படத்திற்கு ஏற்றவகையில் சிறப்பாக அமைந்துள்ளன.

Namaksho.rm -

தஸாதக் ஹீசேனின் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக உள்ளது. பாடலில் இடம்பெறும் ஓ.. சாத்திரே... என்ற மென்மையான பாடலுக்கு மிக அருமையாக ஸ்லோமோஷனில் கமரா விளையாடியுள்ளது.



Omkara - O Saathi Re -

ஓமியும் டோலியும் கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்கு போய், பின் மற்றொரு வழியாக மேல்மாடியிலிருந்து கீழே வந்து வெளிவாசற்கதவால் வெளியேறிச்செல்வது வரை ஒரே காட்சியாக crane shot இல் படமாக்கியிருப்பது அற்புதம்.





ஓமி எனப்படும் ஓம்காரா பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தளபதி என்ற நிலையில் இருப்பவர். கட்சி சார்பான ரெளடீசங்களுக்கு இவரே பொறுப்பு என்பதால் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்குகிறார். இவருக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களாக லங்க்டா மற்றும் கேசு என்பவர்கள் இருக்கிறார்கள்.


ஒரு பொது நிகழ்வொன்றில் தனக்கடுத்தபடியான தளபதியாக கேசுவை ஓமி அறிவிக்கின்றார். இதனால் பொறாமைப்படும் லங்க்டா ஓமி மணந்து கொள்ள இருப்பவரும் ஓமியின் காதலியுமான டோமிக்கும் கேசுவுக்கும் தவறான உறவு இருப்பதான ஒரு எண்ணத்தை ஓமியின் மனதில் மெது மெதுவாக ஆனால் உறுதியாக ஏற்படுத்துகிறார். இந்த சதிக்கு முக்கியமாக இருப்பது ஒரு ஒட்டியாணம்.


இறுதியில் முடிவு எப்படியாகிறது என்பதே கதை. ஒரு அனர்த்தத்தை நோக்கியதான திரைக்கதை நகர்வு மிகச்சிறப்பாக உள்ளது. அஜய் தேவ்கான் கரீனா கபூர், சைவ் அலிகான், விவேக் ஒபராய், பிபாசா பாசு உட்பட மற்றும் பலரை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக சைவ் அலிகான் மிகச்சிறப்பாக தனது வில்லன் பாத்திரத்தை செய்துள்ளார்.


2006 இல் வெளியிட்டபோது இந்தியாவில் வசூலில் சாதனை படைக்காவிட்டாலும் வெளிநாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது. லண்டனில் விரைவிலேயே முதல் பத்து படங்களுள் இடம்பிடித்தது. அமெரிக்கா ஒஸ்ரேலியா, தென்ஆபிரிக்க நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது.


2006 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன் படம் தொடர்பான விவரண புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. பிலிம்ஃபேர், பொலிவூட் மூவி விருதுகளை படத்தின் சகல துறைகளும் அள்ளிக்கொண்டதுடன் படம் வேறும் பல விருதுகளை பெற்றுக்கொண்டது.

விஷால் பரத்வாஜ் ஷேக்ஸ்பியரின் மெக்பத்தை அடிப்படையாகக்கொண்டு மெக்பல் எனும்படத்தை முன்னரே இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கும் சைவ் அலிகான் பேசும் வசனத்தின் ஒரு மொழிபெயர்ப்பு...

'மடையனுக்கும் முட்டாளுக்கும் இருப்பது ஒரு சின்ன இடைவெளிதான். இந்த இடைவெளியை நீக்கிவிட்டால் இருவரையும் வேறுபிரிப்பது கஷ்டம்..'

12 comments:

கானா பிரபா said...

போன கிழமை டிவிடி எடுத்துக் கொண்டு வந்தேன், அதுக்குள்ள ஒரு மலையாளப்படம் வந்து குழப்பிப் போட்டுது. உங்கள் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுது. நன்றி.

கடைசி பந்தியில் யாரையும் வச்சு காமடி கீமடி பண்ணலியே ;-)

Mohandoss said...

'ஷரத் கோடொம்பே லாகேங்கே கடோர், ஷெஹ்ரோம்பே நஹி.'

எனக்கு மிகவும் பிடித்த 'உலக சினிமா' வசனங்களில் ஒன்று.

Mohandoss said...

மன்னிக்கவும் அது 'லகாதேங்கே' - 'லாகேங்கே' இல்லை type. ஆசாத் அண்ணன் ஒரு ரிவ்யூ எழுதியிருந்தார் இந்தப்படத்திற்கு.

ஆ.கோகுலன் said...

மாலை வணக்கம் கானா பிரபா மற்றும் மோகன்தாஸ்.

கருத்துகளுக்கு மிகவும் நன்றி.


கானா பிரபா said...
//உங்கள் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுது. //

அவசரத்தில் பார்க்கவேண்டாம். ஓய்வாக இருக்கும்போது பாருங்கோ. மிகவும் இரசனையான துன்பியல் படம்.

//கடைசி பந்தியில் யாரையும் வச்சு காமடி கீமடி பண்ணலியே ;-)//

:))))


மோகன்தாஸ் said...
// ஆசாத் அண்ணன் ஒரு ரிவ்யூ எழுதியிருந்தார் இந்தப்படத்திற்கு.//

இணைப்பையும் குறிப்பிட்டிருக்கலாமே..

Mohandoss said...

http://ennam.blogspot.com/2006/08/blog-post_17.html

மேலே இன்னொரு typo error, typo என்று அடிப்பதற்கு type என்று அடித்துவிட்டேன்.

சென்ஷி said...

வாங்கி வந்து வச்சு பார்க்காம இருக்கற படத்துல இதுவும் ஒண்ணு. கண்டிப்பா பார்த்துடறேன். விமர்சனத்துக்கு நன்றி..

ஆ.கோகுலன் said...

//மோகன்தாஸ் said...

மேலே இன்னொரு typo error, typo என்று அடிப்பதற்கு type என்று அடித்துவிட்டேன்//

:)) ஆசாத் அண்ணரின் இணைப்பை தந்தமைக்கு மிக்க நன்றி.அவரின் விமர்சனம் கலக்கல். :)

ஆ.கோகுலன் said...

வணக்கம் சென்ஷி..!

ஓய்வாக இருக்கும்போது மட்டும் பார்க்கவும்.நிரம்ப இரசிக்க முடியும்.
பார்த்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிகவும் நன்றி வருகைக்கும் பகிர்விற்கும்.

முரளிகண்ணன் said...

இந்தி சுத்தமாக தெரியாது. இந்தப்படத்தை ரசிக்க முடியுமா?

ஆ.கோகுலன் said...

நமஸ்தே முரளிகண்ணன்..!,

எனக்கும் ஹிந்தி தெரியாதுதான். :)

English sub titles உள்ள டி.வி.டி யில் பார்க்கலாம்.

bandhu said...

இந்த படம் பார்த்ததற்கு அப்புறம் தான் சைப் அலி கானுக்கு இவ்வளவு நன்றாக நடிக்க தெரியும் என்று தெரிந்து கொண்டேன்! பீடி பாட்டை பற்றி சொல்லலியே!

ஆ.கோகுலன் said...

நன்றி பாண்டு,

உண்மைதான்.. பதிவின் நீளம் கருதி எழுதவில்லை..

மிகவும் நன்றி