Saturday, May 10, 2008

சுவர்ண சுந்தரி

1958 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் சுவர்ணசுந்தரி. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'குஹீ குஹீ போலே கொயலியா..' எனத்தொடங்கும் பாடல் அனைத்து இசைப்பிரியர்களையும் கொள்ளை கொண்டது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினரிடம் கூட பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இப்பாடலை பெரும்பாலான திரைஇசைப்போட்டிகளில் போட்டியாளர்கள் சவாலாக ஏற்று நம்பிக்கையுடன் பாடுவதை அவதானிக்க முடிகிறது. இப்பாடல் தொடர்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சொல்லும்போது இப்பாடல்களைப் பாடாத போட்டிகளும் குறைவு, இதைப்பாடியும் வெற்றிபெறாதவர்களும் குறைவு எனக்குறிப்பிடுகின்றார். இந்தளவிற்கு இப்பாடலின் இசை கவர்ச்சியாகவும் நுணுக்கம் மிகுந்ததாகவும் காணப்படுகிறது. மேடை நிகழ்வு ஒன்றில் லதாமங்கேஷ்கார் அவர்கள் பாடிய இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்

kuhu kuhu bole koyaliya - Latha Mankeshkar

ஆதிநாராயணராவ் என்ற இசையமைப்பாளரால் இசையமைக்கப்பட்ட இப்பாடல் ஹம்சானந்தி இராகத்துடன் தொடங்கி இராகமாலிகையின்பின்னர் கல்யாணி இராகத்துடன் முடிகிறது. இடையிடையில் வரும் சவாலான அசைவுகள் சிலாகிப்பானவை. இறுக்கமான லய அமைப்பும் கூட. 1958 இல் லதாமங்கேஷ்கார் மற்றும் எம்.லத்திஃப் இருவராலும் பாடப்பெற்றது.

Kuhu Kuhu Bole Koheliya - Latha Mankeshkar , M.Latif

பின்னர் இது தமிழில் 'மணாளனே மங்கையின் பாக்கியம்' என்றபெயரில் எடுக்கப்பட்டபோது இதே பாடல் 'தேசுலாவுதே தேன்மலராலே..' என்று தொடங்கும் பாடலாக மொழிமாற்றம் செய்யப்பட்டு பி.சுசீலா மற்றும் கண்டசாலா ஆகியோரால் பாடப்பட்டது. தென்னிந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் போட்டி நிகழ்ச்சியொன்றில் ராகினிசிறீ தமிழ்வடிவத்தை சிறப்பாகப்பாடுகிறார்.




தற்போது பிரபலமான பாடகியாக விளங்கும் ஷ்ரேயா கோஷலும் சிறுவயதில் இப்பாடலை ஒரு Children's Mega Final போட்டி நிகழ்ச்சியொன்றில் கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்காமல் தனது கற்பனையையும் சேர்த்து பிரமாதமாகப்பாடுகிறார்.

shreya-kuhukuhu.mp3 - Shreya Goshal

மலையாள தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போட்டியின்போது போட்டியாளர் ரூபா கடும் பயிற்சியுடன் சிறப்பாகப்பாடி நடுவர்களையே அசத்துகிறார்.



இவ்வாறு எக்காலத்திலும் சிலாகிக்கும் ஒரு பாடலைத்தந்து காலத்தால் அழியாதவராக இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவ் நிலைத்து நிற்கிறார்.

றேடியோஸ்பதியில் பின்னூட்டம் ஒன்றின் மூலம் இப்பாடலின் தமிழ் வடிவம் தொடர்பாக தகவல் தெரிவித்த திருமதி.துளசிகோபால் அவர்களுக்கு நன்றி.

இதோ அந்த பாடல் வரிகள்..

ஆ....ஆ...ஆ...ஆ...ஆ
?தேசுலாவுதே தேன் மலராலே
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா...
விளையாட வா...
தேசுலாவுதே தேன் மலராலே

மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ
மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய்.
மது நிலை தவழ்ந்திடும் புது நிலையால்
மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே

பாராய்....
பாராய் மறைந்து வரும் மின்னலயே
பாராய் மறைந்து வரும் மின்னலயே..
மின்னுவதேனோ..
மேக ராஜான் சுகமேவிட தானோ'
உண்மை இதானோ
உயிர்கள் வாழ மழை பெய்திட தானோ
உரிமையோடு மன வானில் நாமே
உரிமையோடு மன வானில் நாமே
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே

ஓ..ஓ...ஓ......
ஓடி வா வெண்ணிலாவே
இங்கு ஓடி வா வெண்ணிலாவே
வருவாய் நிலாவே
வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே
ஓடி வா வெண்ணிலாவே
கண்ணால் பேசும் காவியமே
கண்ணால் பேசும் காவியமே
காவியமே புகழ் காதல் இன்பமே
காவியமே புகழ் காதல் இன்பமன
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் .. ஆ. ஆ ..ஆ ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே...

ஆ...ஆ..ஆ..ஆ..
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ...
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ...
மனதை போல் மலருமே
இதயமே உன்னிடமே
இதயமே உன்னிடமே
இன்பம் பாயும் உன்னாலே என் வாழ்விலே
பாயும் உன்னாலே என் வாழ்விலே

13 comments:

கானா பிரபா said...

அருமையான பாட்டுதொகுப்பு

மணாளனே மங்கையின் பாக்கியம் படப்பாட்டுக்குப் பின் இந்த மூலப்பாடல்கள் இருக்கும் செய்தி இன்று தான் தெரிந்தது.

நீங்கள் சொன்னது போல் ஆதி நாராயணராவின் இசை சொக்க வைக்கின்றது.

ஆ.கோகுலன் said...

வாருங்கள் கானாபிரபா,

நிச்சயமாக சிறப்பான இசைதான். 'பேசுலாவுதே..' என்ற தமிழ் வரியின் அர்த்தம் தான் என்ன என்பது புரியவில்லை.
கருத்துக்கு மிக்க நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

இப்போதுதான் இந்தப் பதிவை வாசித்தேன். பாடல்களும் அருமை.

கொரியாவில் என்ன விசேஷம்?

ஆ.கோகுலன் said...

வணக்கம் நிர்ஷன்,

இங்கு இப்போது இளவேனிற்காலம் குளிரால் வரண்டு போன இடமெல்லாம் பசுமைகாண ஆரம்பித்திருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஆயில்யன் said...

அருமையான பாடல் நன்கு அவதானித்து தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்:)

இத்தொகுப்பில் ஸ்ரேயா கோஷலும் இருப்பதில் ஒரு கூடுதல் மகிழ்ச்சி :)))))

ஆ.கோகுலன் said...

ஓமோம் ஆயில்யன். ஆனா நீங்க மன்றமெல்லாம் அமைப்பதற்கு முன்னர் பாடிய பாடல்.. :-)))

Anonymous said...

அருமையான பாடல்..
இணைப்புக்களுக்கு மிக்க நன்றி கோகுலன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஆ.கோகுலன் said...

வணக்கம் தூயா..!

கேட்டு ரசித்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தற்போது தமிழ் வடிவ பாடல் வரிகளையும் சேர்த்திருக்கிறேன்.

Tech Shankar said...

தற்போது தமிழ் வடிவ பாடல் வரிகளையும் சேர்த்திருக்கிறேன்.

thank you for adding lyrics

ஆ.கோகுலன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்.

Dr.V.K.Kanniappan said...

’தேசுலாவுதே தேன் மலராலே’ ஒரு அருமையான பாடல். இப்பாடல் ஹம்சாநந்தி ராகத்தில் ஆரம்பித்து, ராக மாலிகையாக பாடப்பட்டு, கல்யாணி ராகத்தில் முடியும் என்று அறிகிறேன். இதில் வேறு என்னென்ன ராகங்கள் வருகின்றன?
வ.க.கன்னியப்பன்

சாமக்கோடங்கி said...

என்ன ஒரு இசை.. அருமை...